எடப்பாடி பழனிசாமி 
தமிழ் நாடு

ஆளுநருக்கும் அரசாங்கத்துக்குமான பிரச்னை- எடப்பாடி பழனிசாமி ஹ..ஹா!

Staff Writer

சட்டப்பேரவையில் ஆளுநருக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான விவகாரம் அவர்களுக்கு இடையிலான பிரச்னை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

பேரவையில் இன்று நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து பேரவைக்கு வெளியே செய்தியாளர்கள் அவரிடம் கேட்டனர். அப்போதுதான் அவர் இவ்வாறு கூறினார்.

ஆளுநர் உரையாற்றாமல் இருந்தது பற்றி மீண்டும் செய்தியாளர் கேட்டதற்கு, அதைப் பற்றி ஆளுநரிடமோ பேரவைத் தலைவரிடமோ கேட்கவேண்டும்; இது ஆளும் கட்சியின் பிரச்னை; நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கிறோம்; அவர்களிடம்தான் கேட்கவேண்டும் என சிரித்தபடியே எடப்பாடி பழனிசாமி கூறினார். 

மேலும், அவையின் மரபு எனக் கூறும் பேரவைத்தலைவர், எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கை தொடர்பாக நாங்கள் பல முறை கூறியும், எங்கள் கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சித் துணைத்தலைவர் உதயகுமாருக்கு உரிய இடத்தை ஒதுக்கவில்லை என்றும் அவைத்தலைவர் இனியாவது மரபைக் காப்பார் என நம்பலாம் என்றும் கூறினார்.