கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பெண்ணுக்குஆளும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் சூடுபிடித்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஆளுநரிடம் இன்று காலையில் நேரில் சென்று புகார் அளித்தார்.
அதையடுத்து, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் கனிமொழி என்விஎன் சோமு, சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்தார்.
இந்நிலையில், அதே மாவட்டத்தைச் சேர்ந்த இன்னொரு பெண் அதிகாரி தியாகதுருகம் போலீஸ்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், ரிசிவந்தியம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் தன்னை மிரட்டியதாக அவர் குறிப்பிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அவரது புகாரின்பேரில் கார்த்திகேயன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
முன்னதாக, குறிப்பிட்ட வட்டார வளர்ச்சி அலுவலரான பெண் அதிகாரி தனக்குக் கீழ் பணியாற்றும் பணியாளரைத் திட்டியதாக எழுந்த பிரச்னையில், அந்த அதிகாரியிடம் வசந்தம் கார்த்திகேயன் இதுகுறித்து கண்டித்ததாக நேற்று உதயநிதி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.