க. பொன்முடி 
தமிழ் நாடு

இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மீண்டும் அமைச்சராகிறார் பொன்முடி- உச்சநீதிமன்றக் கண்டனம் எதிரொலி!

Staff Writer

உச்சநீதிமன்றம் ஆளுநர் இரவிக்கு நேற்று தன் கண்டிப்பைத் தெரிவித்ததைத் தொடர்ந்து, பொன்முடிக்கு இன்று மீண்டும் அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்துவைக்க இரவி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.  

அதன்படி, இன்று பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை, கிண்டி ஆளுநர் மாளிகையில் உள்ள பாரதி அரங்கில் பதவியேற்பு விழா எளிமையாக நடைபெறும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உச்சநீதிமன்றத்தில் நேற்று தமிழக அரசு தெரிவித்தபடி பொன்முடிக்கு அவர் ஏற்கெனவே வகித்துவந்த உயர்கல்வித் துறையே மீண்டும் வழங்கப்படும்.