தமிழக மீனவர் (கோப்புப் படம்)
தமிழ் நாடு

இலங்கைக் கொள்ளையர் அட்டூழியம்- தமிழக மீனவர் 3 பேர் படுகாயம்!

Staff Writer

நாகை கோடியக்கரை கடலோரத்திலிருந்து இலங்கை எல்லைப் பகுதியில் உள்ள கடல் பகுதியில் மீன்பிடியில் இருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர்.

வேதாரண்யத்தை சேர்ந்த மீனவர்கள் அப்பகுதியில் இன்று அதிகாலையில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடல் கொள்ளையர்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர் என்று கூறப்படுகிறது.

தமிழக மீனவர்களிடமிருந்து 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வலை ஜிபிஎஸ் கருவி, மற்ற மீன்பிடி சாதனங்கள் ஆகியவற்றையும் அவர்கள் கொள்ளை அடித்துச்சென்றனர். 

கடற்கொள்ளையர்களின் தாக்குதலால் வேதாரண்யத்தை சேர்ந்த மீனவர்கள் ராஜேந்திரன் ராஜ்குமார் நாகலிங்கம் ஆகியோர் தலையில் பலத்த காயமடைந்தனர்.

உயிர்காக்கத் தப்பியோடிய சக மீனவர்கள் அவர்களை மீட்டுக் கரைக்குக் கொண்டுவந்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.