தமிழ் நாடு

இலங்கையில் 355 பேர் பலி; 366 பேர் மாயம்!

Staff Writer

இலங்கையில் சில நாள்களாகத் தொடர்ந்துவரும் சீரற்ற காலநிலை காரணமாக, அந்நாட்டில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மகாவலி ஆற்றில் எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மற்ற பல பெரிய ஆறுகளிலும் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்துவருகிறது.

இன்றுவரை மழை, வெள்ளத்தால் மொத்தம் 355 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 366 பேரின் கதி என்ன என்று தெரியவில்லை கூறப்படுகிறது.

இலங்கைப் பேரிடர் மேலாண்மை மத்திய நிலையத்தின் சார்பில் இன்று காலை 10.30 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மலையகப் பகுதிகளில்தான் அதிகமான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, நிலச்சரிவுகளால் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

3,18,252 குடும்பங்களைச் சேர்ந்த 11,56,860 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

மோசமாக பாதிக்கப்பட்ட 59,266 குடும்பங்களைச் சேர்ந்த 2,09,568 பேர் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.