துணைமுதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
காஞ்சிபுரம் நித்யா சுகுமார், உத்திரமேரூர் சுந்தர் ஆகியோரை ஆதரித்து அவர் இன்று பிற்பகல் பிரச்சாரம் செய்தார்.
காஞ்சிபுரத்துக்கும் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கும் தி.மு.க. ஆட்சியில் செய்யப்பட்ட பல திட்டங்களை அவர் எடுத்துக்கூறினார். நகராட்சியாக இருந்த காஞ்சிபுரத்தை மாநகராட்சியாகத் தரம் உயர்த்தியது தி.மு.க. ஆட்சியில்தான் என்பதை அவர் அழுத்தமாகக் குறிப்பிட்டார்.
முன்னதாக, அறிஞர் அண்ணாவின் வீட்டுக்குச் சென்று மரியாதை செலுத்திவிட்டு வந்தார்.
கடந்த மக்களவைத் தேர்தலிலும் இவ்வாறே செய்ததையும் உதயநிதி குறிப்பிட்டுப் பேசினார்.