உதயநிதி- ஆலந்தூர் பாரதி  
தமிழ் நாடு

உதயநிதியின் கையில் கட்டு...என்ன ஆச்சு?

Staff Writer

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை ஆதம்பாக்கத்தில் அம்பேத்கர் சிலைத் திறப்பு நிகழ்வில் நேற்று பங்கேற்றார். அவருடன் அந்தப் பகுதியை உள்ளடக்கிய ஆலந்தூர் முன்னாள் நகராட்சித் தலைவரும் தி.மு.க.வின் அமைப்புச்செயலாளருமான ஆலந்தூர் பாரதியும் கலந்துகொண்டார். 

உதயநிதி மேடைக்கு வந்ததும் அவருடைய உதவியாளர் தண்ணீர்க் குடுவை ஒன்றைக் கொண்டுவந்து தந்தார். அதை வாங்கிக் குடிக்க முயன்றபோது அவருக்கு சிரமம் ஏற்பட்டது. 

அப்போதுதான் அதை பாரதி கவனித்தார். உதயநிதியின் வலது கையில் விரல்களில் கட்டு போடப்பட்டிருந்தது. அதுகுறித்து ஆலந்தூர் பாரதிக்கு அவர் விளக்கம் அளித்துக்கொண்டே குடுவையில் உள்ள தண்ணீரை அவர் குடித்து முடித்தார். 

இந்தக் காட்சியைப் பார்த்து, அவருக்கு என்ன ஆயிற்றோ என தி.மு.க. தொண்டர்கள் உச் கொட்டினார்கள்.