தமிழ் நாடு

உறவுப் பிரச்னை- விஜய் கட்சி மா.செ. பதவி பறிப்பு!

Staff Writer

மணம் மீறிய உறவுப் பிரச்னை காரணமாக விஜய் கட்சியின் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. 

கரூர் விவகாரத்தைப் போல அசம்பாவிதம் நிகழாதபோதும், நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ் மீது காவல்துறை புகார் கூறியிருந்தது. அதையொட்டி அவர் கைதுசெய்யப்பட்டார். அப்போது தனியார் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியது அவர் மீதான வழக்கு. 

இந்த நிலையில், நாமக்கல் கிழக்கு மா.செ. செந்தில்நாதன் அக்கட்சியின் மகளிர் அணி நிர்வாகியுடன் மணம்மீறிய உறவில் இருந்ததாகக் கூறி பிரச்னை எழுந்தது. கட்சிக்குள் இந்த விவகாரம் எதிரொலித்ததை அடுத்து, அவரின் பதவியைப் பறித்து த.வெ.க. பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.