ஐ.ஜி. அஸ்ரா கர்க் 
தமிழ் நாடு

உளவுத் துறை ஐ.ஜி.யாக அஸ்ரா கார்க் நியமனம்!

Staff Writer

காவல்துறை வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க், உளவுத் துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். 

இதற்கான உத்தரவை உள்துறைச் செயலாளர் மணிவாசன் பிறப்பித்துள்ளார்.

முன்னதாக, சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் செந்தில் வேலனை மாற்றிவிட்டு அவினாஷ் குமாரை இப்பதவிக்கு நியமித்திருந்தது. 

புதிய அரசு பதவியேற்றவுடன் வரிசையாக முக்கியமான அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர். 

நேற்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சிலர் மாற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.