கேரள மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பரவிவரும் நிலையில், அங்கிருந்து தமிழகத்துக்கு வருபவர்களுக்கு மருத்துவ சோதனை மேற்கொள்ளப்படுகிறது. மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில் இதற்காக அமைக்கப்பட்ட சோதனைச் சாவடிகளில் சுகாதாரத் துறையினர் கேரளத்திலிருந்து வரும் வாகனங்கள், ஆட்களிடம் மருத்துவப் பரிசோதனை நடத்துகின்றனர்.