தில்லியில் நடைபெற்றுவரும் போராட்டங்களைப் பற்றிய மோகன் பகவத் கருத்துக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பதிலடி கொடுத்துள்ளார்.
” ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், நடைபெற்று வரும் போராட்டங்கள் ஆட்சி மாற்றத்திற்கான போராட்டங்கள் என்றும், அது அடிப்படைப் பிரச்சினைகளுக்குத் தீர்வளிக்காது என்றும் விஜயதசமி விழாவில் பேசியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ்.-ஆல் வழிநடத்தப்படும் பாஜக ஆட்சியை அதிகாரத்திலிருந்து தூக்கி எறிய வேண்டும் என்றுதான் கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் விரும்புகிறோம். ஆனால், நடைபெறும் போராட்டங்கள் வரையறுக்கப்பட்ட கோரிக்கைகளுக்காக நடைபெறுகின்றன என்பது நாட்டு மக்கள் எல்லோருக்கும் தெரியும்.
எனவே, நீங்கள் ஏதோ பொற்கால ஆட்சியை நடத்திக்கொண்டிருப்பது போலவும், அதைக் கவிழ்க்க நாங்கள் போராடுகிறோம் என்றும் திசைதிருப்ப வேண்டாம்.” என்று சண்முகம் தன் சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.