முதலமைச்சர் விஜய் சென்னையில் இன்று குழந்தைகள் தின நிகழ்வுகளில் கலந்துகொண்டார்.
முதலில் கொளத்தூரிலும் பின்னர் பெரம்பூரிலும் என அடுத்தடுத்து நிகழ்வுகளில் கலந்துகொண்டவர், வாகனத்தில் இறங்கி சாலையில் இரு புறமும் நின்றிருந்தவர்களைப் பார்த்து கையை அசைத்தபடி சென்றுகொண்டிருந்தார்.
அப்போது, பக்கவாட்டிலிருந்து ஒரு நபர் ஊடுருவிச் சென்றபடி முதலமைச்சரின் முதல் சுற்று பாதுகாப்பு வளையத்துக்கு அருகில் சென்றுவிட்டார். அதை கவனிக்காத விஜய் கையை ஆட்டியபடி இரசிகர்களை உற்சாகப்படுத்திச் சென்றார்.
பின்னர்தான் இயல்பாக இடப்புறம் திரும்பிய அவர், தன்னை நோக்கி ஒருவர் ஓடிவருவதைப் பார்த்ததும் அதிர்ச்சிக்கு உள்ளானார்.
அந்த நபரைப் பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்துப் பிடித்துவிட்டபோதும் கண நேரம் அதிர்ச்சிக்கு உள்ளான முதலமைச்சர் விஜய், சற்றே பின்வாங்கி பின்னர் இயல்புக்கு வந்தார்.
முதலமைச்சரின் கடும் பாதுகாப்பு வளையத்தையும் மீறி ஒருவர், அவரை நெருங்க முயன்ற இந்தக் காணொலி சமூக ஊடகங்களில் தீயாய்ப் பரவிவருகிறது.