அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. சேர்ந்துள்ள நிலையில், அடுத்ததாக ஒரு கட்சி ஓரிரு நாளில் சேரவுள்ளது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தலைமைக்கழகத்தில் வேட்பாளர் விருப்ப மனு கொடுத்தவர்களிடம் அவர் உட்பட தலைமை நிர்வாகிகள் இன்றும் நேர்காணல் செய்தனர். அப்போது அவர்களிடையே பேசுகையில் கூட்டணியைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்; அதை நான் பார்த்துக்கொள்கிறேன் என எடப்பாடி பழனிசாமி தெம்பூட்டினார்.
மேலும், பல கட்சிகளுடனும் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் ஓரிரு நாளில் ஒரு கட்சி அ.தி.மு.க. கூட்டணியில் சேரவுள்ளதாகவும் அவர் கூறினார்.