திருப்பரங்குன்றம் 
தமிழ் நாடு

கடையடைப்புக்கு மறுத்த திருப்பரங்குன்றம் வியாபாரிகள்!

Staff Writer

கார்த்திகை தீப விவகாரத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றம் பகுதியில் பரபரப்பு நிலவிவருகிறது. இதில், சிக்கந்தர் தர்காவுக்குச் சொந்தமான அளவைக் கல்லில் தீபத்தை ஏற்றும்படி இந்துத்துவ அமைப்பினரின் கோரிக்கையை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. 

அதை எதிர்த்து தமிழ்நாட்டு அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. 

இந்த நிலையில், பா.ஜ.க.வும் இந்துத்துவ அமைப்பினரும் மனுதாரரைத் தாண்டி இந்த விவகாரத்தில் தீவிரமாகத் தலையிட்டு வருகின்றனர். 

நேற்று இரவும் காவல்துறையினரின் தடையை மீறி அவர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களைக் காவல்துறையினர் கைதுசெய்தனர். 

அதைத் தொடர்ந்து இன்று காலையில் திருப்பரங்குன்றம் கோயிலைச் சுற்றியும் உள்ள கடைகளை அடைக்கச் சொல்லி இந்துத்துவ அமைப்பினர் கையெடுத்துக் கும்பிட்டு கேட்டுக்கொண்டனர். ஆனால் வியாபாரிகளும் பொதுமக்களும் அதைப் பொருட்டாகக் கண்டுகொள்ளவே இல்லை.