நானூறுக்கும் மேற்பட்ட கட்சிகளின் பதிவை தலைமைத் தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இதற்கு ம.ம.க. கண்டனம் தெரிவித்துள்ளது.
பதிவு இரத்து செய்யப்பட்ட கட்சிகளில் தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ஜவாஹிருல்லா தலைமையிலான ம.ம.க.வும் இடம்பெற்றுள்ளது.
ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து 30 நாள்களுக்குள் மேல்முறையீடு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இக்கட்சி 2009இல் ஆணையத்தில் பதிவுசெய்யப்பட்டு, பல தேர்தல்களில் சொந்த சின்னத்தில் போட்டியிட்டது. 2019 முதல் கூட்டணி சார்பில் சொந்த சின்னத்தில் போட்டியிடவில்லை.
இதற்கிடையில் பல உள்ளாட்சித் தேர்தல்களில் ம.ம.க. சொந்த சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.