மக்கள் நீதி மையம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மண்டலவாரியாக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இரண்டு நாள்களுக்கு முன்னர் சென்னை, காஞ்சிபுரம் மண்டலங்களுக்கு உட்பட்ட நிர்வாகிகளுடன் வரும் சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக கட்சித் தலைவர் கமல் ஹாசன் ஆலோசனை நடத்தினார்.
நேற்று மதுரை, கோவை மண்டலங்களைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
மூன்றாவது நாளாக இன்றும் நெல்லை மண்டல நிர்வாகிகளுடன் ஆலோசனை தொடர்ந்துவருகிறது.
இதையொட்டி, செய்தியாளர்கள் கமலைச் சந்தித்தனர். அப்போது, ம.நீ.ம. எப்படி 100 ஆண்டுகள் இருக்கும் என வாழ்த்தினீர்கள் என்று ஒரு செய்தியாளர் கேட்டார். நம் குழந்தை நூறாண்டுவரை நன்றாக இருக்கவேண்டும் என வாழ்த்துவதைப் போலத்தான்... எனக்கு 70 வயது ஆகிறது. அடுத்தும் தொடர்ந்து எடுத்துச்செல்லவேண்டும் என்றார்.
கடைசியாக இளம் செய்தியாளர் ஒருவர், கட்சியினருக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன என்றார். அதற்கு கமல், நீங்க கட்சியில சேருங்க; சொல்றேன் என நகைப்புடன் கூறிவிட்டு சந்திப்பை முடித்துக்கொண்டார்.