கரூர் விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் கொல்லப்பட்டது குறித்து சிபிஐ விசாரணை நடத்திவருவது தெரிந்ததே... சர்ச்சையின் மையமானத.வெ.க.தலைவர் விஜய்யிடமும் கடந்த வாரம் சி.பி.ஐ. குழுவினர் விசாரணை நடத்தினர்.
முதல் கட்டமாக நடத்தப்பட்ட அந்த விசாரணை சுமார் ஏழு மணி நேரம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, இரண்டாவது கட்டமாக தில்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் மீண்டும் இன்று விஜய்யை விசாரிக்க அழைப்பாணை அனுப்பப்பட்டது. அதன்படி அங்கு சென்ற விஜய்யிடம் காலை 10.30 மணியிலிருந்து மாலை 4.30 மணிவரை விசாரணை நடத்தப்பட்டது.