தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டு சிறைக்குச் சென்று மனந்திருந்தி வாழமுனைவோருக்கு மறுவாழ்வு நிதியாக இனிதலா ஒரு இலட்சம் ரூபாய் வழங்கப்படும்.
சட்டப்பேரவையில் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் இன்று இதைத் தெரிவித்தார்.
கள்ளச்சாராயம் தொடர்பான தொழில்களில் ஈடுபட்டு விடுதலையாகி மனம் திருந்தி வாழ்பவர்கள் மீண்டும் இதே தொழிலில் ஈடுபடாமல் தடுக்க அவர்களுக்கு மறுவாழ்வு அவசியம் என்றும்,
அதற்காக அவர்களின் சமூக, பொருளாதார நிலையை உயர்த்தி வாழ்வாதாரத்தை உயர்த்த தற்போதைய பொருளாதார சூழலைக் கருத்தில்கொண்டு, அவர்களுக்கான மறுவாழ்வு நிதியை 50 ஆயிரம் ரூபாயிலிருந்து ஒரு இலட்சம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று அமைச்சரின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
மது, போதைப்பொருள் தடுப்பு விழிப்பூட்டலுக்காக சமூக ஊடகங்கள் மூலம் 2 கோடி ரூபாயில் பணி மேற்கொள்ளவும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
பிற விழிப்பூட்டல் செயல்பாடுகளுக்கான நிதி ரூ.5 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.