தமிழ் நாடு

கவிஞர் சுகுமாரன், பாரதிபுத்திரன் உட்பட 6 பேருக்கு கலைஞர் பொற்கிழி விருது!

Staff Writer

தென்னிந்தியப் புத்தகப் பதிப்பாளர், விற்பனையாளர் சங்கம்- பபாசியின் சார்பில் தமிழில் சிறந்து விளங்குவோருக்கு கலைஞர் கருணாநிதி பொற்கிழி விருது வழங்கப்பட்டு வருகிறது. 

வரும் சென்னைப் புத்தகக் காட்சியை முன்னிட்டு, கவிதைப் பிரிவில் மூத்த கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான கட்டுரையாசிரிருமான சுகுமாரனுக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

உரைநடை பிரிவில் பேராசிரியர் பாரதி புத்திரன் என்கிற பாலுசாமிக்கு வழங்கப்படுகிறது.

சிறுகதைக்காக ஆதவன் தீட்சண்யாவுக்கும் நாவலுக்காக இரா.முருகனுக்கும் பொற்கிழி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடகத் துறையில் சிறந்த செயல்பாட்டுக்காக கலைஞர் கருணா பிரசாத்துக்கும் மொழிபெயர்ப்புக்காக வ. கீதாவுக்கும் விருது வழங்கப்படுகிறது.