தமிழ் நாடு

காங். - தி.மு.க.வுடன் முதல் சுற்று பேச்சு தொடக்கம்!

Staff Writer

சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் குழு, சற்றுமுன்னர் தி.மு.க. தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தையைத் தொடங்கியது. 

காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உட்பட்ட அந்தக் குழுவினர், தி.மு.க.வின் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினருடன் பேசத் தொடங்கினார்கள்.

இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி ஆட்சி தொடர்பாக காரசாரமாக விவாதங்கள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து, அண்மையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேசியிருந்தார்.