தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்றது.
அதில், முதல் முறையாக, “ வாக்குரிமையைப் பறிக்கும் வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தம் வேண்டாம்! மீண்டும் வாக்குச்சீட்டு முறையே வேண்டும்!” என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
முக்கியத் தீர்மானங்கள்:
” வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை முழுமையாக இரத்து செய்க!
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்து விசாரித்திடுக!
ஜனநாயகத்திற்காகப் போராடும் மாணவர் இயக்கங்களுக்கு முழு ஆதரவு!
வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு மாற்றாக மீண்டும் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவருக!
எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் மாநிலத்துக்கு மாநிலம் மாறும் காங்கிரசின் நிலைப்பாட்டுக்கும், த.வெ.க.வின் மவுனத்துக்கும் கடும் கண்டனம்!” என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
மக்களின் வாக்குரிமையையும் இந்திய ஜனநாயகத்தையும் பாதுகாக்க, வாக்காளர் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை இரத்துசெய்து வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவர வலியுறுத்திக் குடியரசுத் தலைவரிடம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனு அளிப்பார்கள் என்றும் மு.க.ஸ்டாலின் தன் சமூக ஊடகப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.