தமிழக காங்கிரசில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான மேலாண்மை, ஒருங்கிணைப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் தலைவராக மாணிக்கம் தாகூர் எம்.பி. நியமிக்கப்பட்டுள்ளார்.
சி.டி.மெய்யப்பன் துணைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அக்கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
முன்னாள் மைய அமைச்சர் ப. சிதம்பரம், ஏ.செல்லகுமார், முன்னாள் மாநிலத் தலைவர்கள் தங்கபாலு, கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசு, கே.எஸ். அழகிரி ஆகியோருடன்,
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோதிமணி, சுதா ஆகியோரும்,
பீட்டர் அல்போன்ஸ், சொர்ணா சேதுராமன் ஆகியோரும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
மாநிலத் தலைவர், சட்டமன்றக் குழுத் தலைவர் ஆகிய பதவிகளில் இருப்பவர்களும், காங்கிரஸ் கமிட்டி மேலிடப் பொறுப்பாளர்களும் கூடுதலாக இடம்பெற்றுள்ளனர்.