மழை 
தமிழ் நாடு

காவிரி டெல்டாவில் மழை- எந்த ஊரில் எவ்வளவு?

Staff Writer

காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்களில் கடந்த இரண்டு வாரங்களில் அவ்வப்போது மழை பெய்துவருகிறது. சில நாள்களாக மழை நீடித்துவருகிறது. 

இன்று காலையிலிருந்து மாலைவரை டெல்டாவில் நல்ல மழைப் பொழிவு பதிவாகியுள்ளது. 

அதிகபட்சமாக கோடியக்கரையில் 16.3 செ.மீ. மழையளவு பதிவாகியுள்ளது.

அடுத்ததாக, வேளாங்கண்ணியில் 11.1 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது.

வேதாரண்யத்தில் 11 செ.மீ. மழையும்,

திருப்பூண்டியில் 9.6 செ.மீ. மழையும் பெய்துள்ளது.

நாகப்பட்டினத்தில் 9.1 செ.மீ., திருக்குவளையில் 7.5 செ.மீ., தலைஞாயிறில் 5.6 செ.மீ. அளவுக்கு மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram