தமிழ் நாடு

குமரியில் காங்கிரஸ் நடத்தும் வாக்குத்திருட்டு மாநாடு!

Staff Writer

பீகாரில் தொடங்கப்பட்ட வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தம் கடும் சர்ச்சைக்கு உள்ளானது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த விவகாரம் பெரும் பிரச்னையைக் கிளப்பியது. 

வாக்காளர் திருத்தம் என்கிற பெயரில் வாக்குத்திருட்டு செய்யப்படுவதாகக் கூறி காங்கிரஸ் கட்சி போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. இந்தியா கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளும் இதில் கலந்துகொண்டுள்ளன. 

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அடுத்த மாதம் 7ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநில மாநாடு நடத்தப்படுகிறது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் குமரியில் இன்று நடைபெற்றது. 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமைவகித்தார்.  சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ்குமார், பொருளாளர் ரூபி மனோகனரன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணைத்தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள், மாநில, மாவட்ட நிர்வாகிகளும் இதில் கலந்துகொண்டனர்.