கொக்கிரகுளம் தாமிரபரணி ஆறு 
தமிழ் நாடு

குற்றாலத்தில் பாலம் சேதம், நெல்லையில் இன்று சிவப்பு எச்சரிக்கை!

Staff Writer

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் அதி கனமழை பெய்துவருவதால் அருவிகளை மறைத்தபடி வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. அருவிப் பகுதிகளின் அடையாளமே தெரியாதபடி வெள்ளம் கடுமையாக உள்ளது. 

குற்றாலம் அருவியின் இரண்டாவது பாலத்தை உடைத்தபடி வெள்ளம் பாய்ந்த நிலையில், அந்தக் காட்சி சமூக ஊடகங்களிலும் பரவிவருகிறது.  

இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் இன்று அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

தாமிரபரணி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குறுக்குத்துறை முருகன் கோயில் உச்சி மட்டுமே காலை நிலவரப்படி வெளியில் தெரிகிறது. 

கரையோரம் உள்ளவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிருவாகம் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.