தமிழகத்தில் கூட்டணிக் கட்சிகளுடன் தேர்தல் பங்கீடு பற்றிப் பேச காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் அக்கட்சியில் 5 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கூட்டணிக் கட்சிகளுடன் கலந்துரையாடலைத் தொடங்குவதற்காக, ஐந்து பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை அகில இந்திய காங்கிரஸ் தலைவர்மல்லிகார்ஜுன் கார்கே, அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் அமைத்திருக்கிறார்.
இக்குழுவில் இடம்பெற்றுள்ள மற்றவர்கள் :
கு. செல்வப்பெருந்தகை. எம்.எல். தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி
சூரஜ் எம்.பார். ஹெக்டே, செயலாளர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி
நிவேதித் ஆல்வா, செயலாளர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி
செ. ராஜேஷ்குமார், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர்