கொளத்தூர், பெரியார் மருத்துவமனை 
தமிழ் நாடு

கொளத்தூர் வாக்கு எந்திரத்தில் 30% பிரச்னை- தி.மு.க. குற்றச்சாட்டு

Staff Writer

முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்கு எந்திரங்களில் 30 சதவீதம் பிரச்னை உள்ளது என தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர். இளங்கோ கூறியுள்ளார்.

கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்கு எந்திரங்கள் சோதனை இன்று நடைபெற்றது. அப்போது 8 எந்திரங்களில் 3 எந்திரங்களில் சிக்கல் இருந்தது கண்டறியப்பட்டது என்றும் முகவரி அட்டைகள் புதியவையாக உள்ளன; எந்திரங்களின் எண்கள் மாறியுள்ளன என்றும் இளங்கோ கூறினார்.

வாக்கு எந்திரங்கள் சரியாகப் பாதுகாக்கப்படவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

அந்தத் தொகுதியில் தேர்தல் சரியாக நடைபெறவில்லை என்பதற்கான ஆதாரங்கள் தங்களுக்குக் கிடைத்திருப்பதாகவும் இதன்மூலம் வழக்குத் தொடுக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.