கோவை பெரியார் அறிவுலகத்தில் புத்தகக் கொள்முதலில் ஊழல் முறைகேடுகள் நடந்திருப்பது பெரும் சர்ச்சை ஆகியுள்ளது.
நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டபோது இருந்த அதிகாரிதான் இப்போதும் இருக்கிறார் என தி.மு.க. தரப்பில் அதன் சட்டத்துறை இணைச்செயலாளர் பரந்தாமன் குற்றம் சாட்டியிருந்தார்.
அதற்கு துறை அமைச்சர் இராஜ்மோகன் பேட்டியின்போது நேரடியாகப் பதில் அளிக்காத நிலையில், பொது நூலகத் துறையை கூடுதலாக கவனித்துவந்த ஜெயந்தி ஐ.ஏ.எஸ். அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
அவருக்குப் பதிலாக சஜீவனா நியமிக்கப்பட்டுள்ளார்.