முதலமைச்சர் மு.கஸ்டாலினை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று முற்பகலில் திடீரெனச் சந்தித்தார்.
கோட்டையில் உள்ள தலைமைச்செயலகத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது.
இதுகுறித்து ம.தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ”வைகோ முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்திது, தான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தான் ஆங்கிலத்தில் ஆற்றிய உரைகளின் ஐந்து பாகங்களை வழங்கி அணிந்துரை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் உட்பட தி.மு.க. அணிக் கட்சிகளுக்குள் இன்னும் தொகுதிப் பேச்சு தொடங்காத நிலையில், வைகோ தனியாக ஸ்டாலினைச் சந்தித்திருப்பது கவனம் பெற்றுள்ளது.