கோவில்பட்டி தி.மு.க. அலுவலகம் 
தமிழ் நாடு

கோவில்பட்டியில் தி.மு.க. அலுவலகம் திறப்பு!

Staff Writer

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சி, இளையரசனேந்தல் சாலையில் நகர தி.மு.க. அலுவலகம் புதிதாக நூலக வசதியுடன் கட்டப்பட்டுள்ளது. அதையும் அவ்வலுவலக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலையினையும் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்துவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என். நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், கீதாஜீவன், இராஜகண்ணப்பன், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சட்டமன்ற உறுப்பினர் ராஜா, இரகுராம், திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலாளர் கிரகாம்பெல், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன்,

தலைமைச் செயற்குழு உறுப்பினர் என்.இராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் இரா.ரமேஷ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் (கோவில்பட்டி மேற்கு) எஸ்.பாலமுருகன், கோவில்பட்டி மத்திய ஒன்றியச் செயலாளர் பீக்கிலிபட்டி வீ.முருகேசன், கோவில்பட்டி வடக்கு ஒன்றியச் செயலாளர் ஜி.ஜெயக்கண்ணன், கோவில்பட்டி மத்திய ஒன்றிய விவசாயத் தொழிலாளர் அணி அமைப்பாளர் ஏ. சந்திரக்கண்ணன் உட்பட மாவட்ட நிருவாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.