பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் 
தமிழ் நாடு

’சபாநாயகராக இருக்க பிரபாகருக்குத் தகுதி இல்லை’

Staff Writer

உடல் உருவ கேலி செய்வதை அனுமதித்து சட்டப்பேரவைத் தலைவராக இருப்பதற்குத் தகுதியே இல்லாதவர் என்று தி.மு.க. சட்டத்துறை இணைச்செயலாளர் மு.பரந்தாமன் சாடியுள்ளார். 

தி.மு.க.வின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், அவர் இவ்வாறு கூறினார்.

“ இவ்வளவு காலம் தமிழ்நாட்டில் இப்படி மோசமான ஒன்றை சந்தித்திருக்கிறோமா? அரசியலில் முரணாக இருந்த கலைஞர்- ஜெயலலிதா, ஸ்டாலின் - எடப்பாடி காலத்தில் யாராவது உருவகேலி செய்திருக்கிறார்களா? சட்டமன்றத்தில் யாராவது உடல்மொழியைப் பேசியிருக்கிறார்களா? சட்டமன்ற, நாடாளுமன்ற மரபுகளில் வார்த்தைகளால்தான் ஒருவரைப் புண்படுத்துவது என்பதில்லை. உடல்மொழி மூலமும் செய்யக்கூடாது என்பதுதான்...அதுவே கூடாதுதான். இதில், தன்னுடைய அனுமதியின்படிதான் செய்தார் என சபாநாயகர் சொல்கிறார். இதனால் அவர் தனக்கு அந்தப் பதவிக்குத் தகுதி இல்லை என்பதை நிரூபித்திருக்கிறார். ” என்று பரந்தாமன் கூறினார்.