திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்குப் பாதயாத்திரையாகச் சென்ற பக்தர்கள் மீது இன்று அதிகாலையில் சென்னையிலிருந்து வந்த கார் பயங்கரமாக மோதியதில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் திருவாச்சூர் எனும் இடத்தில் சென்றுகொண்டிருந்தபோது இந்த கோர சம்பவம் நிகழ்ந்தது.
உயிரிழந்தவர்களின் உடல்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன.
கொலைசெய்த காரின் ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.