சட்டப்பேரவையில் இன்று காலையில் முதலமைச்சர் விஜய்யின் பேச்சுக்குப் பதில்கூற வாய்ப்பு தராததைக் கண்டித்து, தி.மு.க. உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, தமிழ்நாட்டில் கனிமச் சுரங்கங்களில் அமைச்சரின் உறவினர் ஆதிக்கத்தில் இருப்பதாகக் குறிப்பிட்டதுடன், விரைவில் அதைப் பற்றிய விவரங்களை வெளியிடப்போவதாகவும் கூறினார்.