தமிழ் நாடு

சுற்றுச்சூழல் தேர்தல் அறிக்கையில் இருப்பது என்ன?

Staff Writer

பூவுலகின் நண்பர்கள் இயக்கத்தின் சார்பில் சுற்றுச்சூழல் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

“இளைஞர்கள் உள்ளிட்ட தமிழ்நாட்டு வாக்காளர்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த அக்கறையும், காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வும் மேலோங்கிக் காணப்படுகிறது. அரசியல் கட்சிகள் இதை மனதில் வைத்துத் தங்கள் தேர்தல் அறிக்கையில் சூழல் பாதுகாப்பிற்குக் கூடுதல் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். இவ்வறிக்கையை அனைத்துக் கட்சிகளையும் நேரில் சந்தித்து வழங்கவுள்ளோம்.” என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. 

அவ்வமைப்பின் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ள கோரிக்கைகள்:

1.     தமிழ்நாடு வானிலை ஆய்வுத்துறை.

அனைத்து மாவட்டங்களிலும் கோட்ட அளவில் வானிலை முன்னறிவிப்பை வழங்கும் வகையில் மாநிலத்திற்கென வானிலை ஆய்வுத்துறை உருவாக்க வேண்டும்.

2. புவி வெப்பமயமாதலால் பாதிக்கப்படும் விளிம்புநிலை மக்களுக்கான கொள்கை.

காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் விளிம்புநிலை மக்கள் தங்களைத் தகவமைத்துக் கொள்ளவும் அவர்களுக்கான வாழ்வாதாரங்களைப் பாதுகாத்திடவும் தனிக் கொள்கை உருவாக்க வேண்டும்.

3. ஜே.சி. குமரப்பா பெயரில் விருது

கிராமங்களின் தற்சார்புப் பொருளாதாரத்திற்காக உழைத்து வரும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்குப் பொருளாதார அறிஞர் ஜே.சி. குமரப்பா பெயரில் ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்க வேண்டும்.

4. மாதவ் காட்கில் பெயரில் ஆய்வு மையம்.

மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் அதன் உயிர்ப்பன்மையத்தைப் பாதுகாக்கும் நோக்கில் அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ள மறைந்த மாதவ் காட்கில் தலைமையில் ஆய்வு மையம் அமைக்கப்பட வேண்டும்.

5. தமிழ்நாடு காலநிலை நெகிழ்திறன் வேளாண் இயக்கம்

புவி வெப்பமயமாதல் அதிகரித்து வரும் நிலையில் பேரிடர்கள், நீர்ப்பற்றாக்குறை இவற்றைக் கருத்தில்கொண்டு மாறிவரும் காலநிலைக்கு ஏற்ப வேளாண்மை செய்ய விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் “தமிழ்நாடு காலநிலை நெகிழ்திறன் வேளாண் கொள்கை” உருவாக்க வேண்டும்.

6. தமிழ்நாடு ஒருங்கினைந்த நலன் மற்றும் காலநிலை ஆணையம்.

நம் மாநிலத்தில் காலநிலை மாற்றம் உண்டாக்கும் பாதிப்புகளை மட்டுப்படுத்த சட்ட அதிகாரங்கள் கொண்ட ஒருங்கிணைந்த நலன் மற்றும் காலநிலை மாற்ற ஆனையம் அமைக்கப்பட வேண்டும். பெரிய அளவிலான வளர்ர்ச்சித் திட்டங்களுக்குச் சுற்றுச்சூழல் தாக்க ஆய்வு மேற்கொள்ளப்படுவதுபோல காலநிலை மாற்றத் தாக்க ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

7. பொதுப் போக்குவரத்துக்கான விரிவான கொள்கை.

மாநிலம் தழுவிய பொதுப் போக்குவரத்துக் கொள்கை உருவாக்க வேண்டும். அனைத்துத் தரப்பு மக்களுக்குமான பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் போக்குவரத்துத் துறையின் கார்பன் உமிழ்வைக் கணிசமாகக் குறைக்கலாம்.

8. மாவட்ட வெப்ப அதிகாரி

மாவட்ட அளவில் பிற அரசுத் துறைகளுக்கான அதிகாரிகள் இருப்பதுபோல கொடும் வெப்பத்தன்மையை எதிர்கொள்வதற்கான பணிகளை கண்காணிக்கும் வகையில் மாவட்ட அளவில் வெப்ப அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்.

9. GPI அடிப்படையிலான வளர்ச்சி

அதிகரிக்கும் காலநிலை மற்றும் சூழல் நெருக்கடிகளை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு GDPக்கு மாற்றாக GPI (Genuine Progress Indicator) போன்ற வளங்குன்றா வளர்ச்சிக் குறியீடுகளை முதன்மை வளர்ச்சி அளவீடாக ஏற்க வேண்டும்.

10. மாநில கனிம வளங்கள் இருப்பு, தேவை, சுரண்டல் குறித்த மதிப்பீட்டாய்வு.

தமிழ்நாட்டின்கனிமவளங்களை  மாநிலத்தின்தேவையைத்தாண்டியும்அண்டைமாநிலங்களுக்குலாபநோக்கில்விற்பதால்கனிமவளங்கள்வேகமாகச்சுரண்டப்பட்டுவருகின்றன. இவ்வளங்களைப்பாதுகாக்ககனிமவளங்களின்இருப்பு, வேகமாகச் சுரண்டப்பட்டு வருகின்றன. இவ்வளங்களைப் பாதுகாக்க கனிம வளங்களின் இருப்பு, எதிர்காலத் தேவை குறித்த ஒரு மதிப்பீட்டாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும்."