சென்னை, பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் பெரும் உயரடுக்கு வீட்டுத் தொகுப்பைக் கட்ட உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
இந்தக் குறிப்பிட்ட பகுதி ராம்சார் பகுதி என வரையறுக்கப்பட்டுள்ளது என்றும் இதில் கட்டுமானங்களை ஏற்படுத்துவது சுற்றுச்சூழல் சட்டங்களை அப்பட்டமாக மீறுவது என்றும் பூவுலகின் நண்பர்கள், பசுமைத் தாயகம், அறப்போர் இயக்கம் போன்றவை எதிர்ப்பு தெரிவித்திருந்தன.
இந்தப் பின்னணியில் அ.தி.மு.க. சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டது. அதை இன்று விசாரித்த நீதிமன்றம், கட்டுமானத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.