தமிழ் நாடு

சென்னையில் எஸ்.ஐ.ஆர். எதிர்ப்புப் போராட்டம்- திருமுருகன் காந்தி கைது!

Staff Writer

வாக்காளர் தீவிரத் திருத்தத்தைத் திரும்பப்பெறக் கோரி தேர்தல் ஆணையத்தை முற்றுகையிடும் போராட்டம்!

தீவிர வாக்காளர் திருத்தப் பட்டியல் எனப்படும் வா.தீ.திருத்தத்தைத் தமிழ்நாட்டில் செயல்படுத்துவதை எதிர்த்து, இன்று மே 17 இயக்கம் சார்பில் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் முற்றுகைப் போராட்டம் இன்று மாலை 6 மணி அளவில் நடைபெற்றது .

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி தலைமை தாங்கினார்.

இதில் மனிதநேய சனநாயக கட்சியின் தலைவர் மு தமிமுன் அன்சாரி, விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் குடந்தை அரசன், வெல்ஃபேர் பார்ட்டி ஆப் இந்தியாவில் தலைவர் அப்துல் ரகுமான், தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் திருவள்ளுவன் முதலிய பல்வேறு மக்கள் இயக்கங்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்களும் பிரதிநிதிகளும் பங்கேற்றனர் .

முற்றுகைப் போராட்டத்திற்கு அனைவரும் புறப்பட்டபோது, காவல்துறையினர் அவர்களைக் கைதுசெய்தனர்.