அமித்ஷா விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் கூறிவிட்டாரெனக் கூறுவதற்கு எடப்பாடி பழனிசாமி எதற்காகப் பொதுச்செயலாளர் பதவியில் இருக்கவேண்டும் என அமைச்சர் இரகுபதி கேட்டுள்ளார்.
புதுக்கோட்டையில் இன்று ஊடகத்தினர் சந்திப்பின்போது அவர் இதைக் கூறினார்.
நெல்லையில் நேற்று ஒருவர் நீதிமன்றத்துக்கு வெளியே வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார்; எங்கு கொலை நடந்தாலும் அரசாங்கம் தடுக்க முடியுமா? சம்பவத்துக்குப் பிறகு இரண்டு மணி நேரத்தில் குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்; இப்போது இங்கு என் முன்னாலேயே ஒருவர் அரிவாளை எடுத்துவந்து வெட்டினால் நாம் என்ன செய்துவிட முடியும்? சம்பவத்துக்குப் பிறகு குற்றவாளிகளைக் கைதுசெய்கிறார்களா என்றுதானே பார்க்கமுடியும் என்றும் அமைச்சர் இரகுபதி குறிப்பிட்டார்.