தமிழ் நாடு

ஜெயலலிதா சொத்துகள் ஏலம் விடப்படும்!

Staff Writer

ஜெயலலிதா செலுத்தவேண்டிய வருமான வரி பாக்கியைச் செலுத்தாவிட்டால் அவருடைய சொத்துகள் ஏலம் விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஊழல் வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படக்கூடிய நிலையில், குற்றவாளியான ஜெயலலிதா திடீரென இறந்துபோனார். ஆனாலும் அவர் மீதான பழைய வழக்குகளில் வருமான வரி பாக்கி வழக்கு நிலுவையில் இருந்தது.

அந்த வகையில் 13 கோடி ரூபாயை அவர் செலுத்தவேண்டும். அதைக் கட்ட அவரின் வாரிசு தீபா கட்ட முடியாது என மறுத்துவந்தார்.

இந்த நிலையில் வருமான வரித் துறை அதைப் பொருட்படுத்தவில்லை. பாக்கியைக் கட்டியாக வேண்டும் என துறையின் சார்பில் இன்று திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டது.