தமிழ் நாடு

டபுள் எஞ்சின் - மோடி; டப்பா எஞ்சின்- ஸ்டாலின்!

Staff Writer

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று பிற்பகல் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர் கலந்துகொண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய பிரதமர் மோடி, திமுக அரசை ஊழல், மாபியா, குற்றங்களின் ஆட்சி என கடுமையாகச் சாடினார். 

வரவிருக்கும் தேர்தலில், தமிழகத்தில் டபுள் எஞ்சின் அரசாங்கத்தை மக்கள் தேர்ந்தெடுத்தால் நல்லது கிடைக்கும் என்று கூறினார். அதற்கு பதிலளிக்கும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறிய கருத்தில், டபுள் எஞ்சின் அல்ல டப்பா எஞ்சின் என்று குறிப்பிட்டுள்ளார். 

முதலமைச்சர் ஸ்டாலினின் சமூக ஊடகப் பதிவு விவரம்:

“பிரதமர் சொல்லும் “டபுள் எஞ்சின்” எனும் “டப்பா எஞ்சின்” தமிழ்நாட்டில் ஓடாது!மாண்புமிகு பிரதமர் அவர்களே…ஒன்றிய பா.ஜ.க. அரசு ஏற்படுத்தி வரும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்துதான் தமிழ்நாடு வரலாறு பேசும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது.கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க…நீங்கள் சொல்லும் “டபுள் எஞ்சின்” மாநிலங்களான உத்திரப் பிரதேசம், மத்திய பிரதேசம், பீகாரைவிட, தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம் என உங்கள் “டப்பா எஞ்சின்” நுழையாத மாநிலங்கள்தான் வளர்ச்சியில் கொடிகட்டிப் பறக்குது.தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்யும் துரோகங்களை, நீங்கள் மறைத்தாலும் #NDABetraysTN என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.தில்லியின் ஆணவத்துக்குத் #தமிழ்நாடு_தலைகுனியாது!"