அ.தி.மு.க. தலைமை அலுவலகம் 
தமிழ் நாடு

டிச.15இல் அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம்!

Staff Writer

அ.தி.மு.க.வின் செயற்குழு, பொதுக்குழுக்  கூட்டம் சென்னையில் அடுத்த மாதம் 15ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வரும் 15.12.2024 ஞாயிறு காலை 10 மணிக்கு, சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீ வாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் இக்கூட்டம் நடைபெறுகிறது. கட்சியின் அவைத்தலைவர் அ.தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெறவுள்ளது.” என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.