கரூர் துயரம் தொடர்பாக சட்டம் ஒழுங்கு முன்னாள் ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் சி.பி.ஐ. இன்று விசாரணை நடத்தியது.
கரூர் விஜய் சாலை உலாவின்போது சிறுவர்கள், பெண்கள் என 41 பேர் கொல்லப்பட்டனர். அது குறித்து முதலில் மாநில அரசு விசாரணை நடத்தியது. சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்தும், அந்த விசாரணையை ஏற்கமறுத்து சிபிஐ விசாரணை கேட்டு உச்சநீதிமன்றம்வரை பிரச்னையைக் கொண்டுபோனார்கள்.
அதைத் தொடர்ந்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. கரூருக்கு வந்து அலுவலகம் அமைத்து சிபிஐ குழு விசாரித்து வருகிறது.
நேற்று விஜய்யின் பிரச்சார வாகனத்தை வரவழைத்து அதில் ஆய்வு நடத்தினார்கள்.
அதையடுத்து, கரூர் துயர சம்பவத்தின்போது சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்த இப்போதைய டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் பிரச்னை குறித்து இரண்டு முறை பகிரங்க பேட்டி அளித்திருந்தார்.
விவகாரத்தைக் கையாண்ட அவரிடம் இன்று சிபிஐ குழுவினர் தில்லி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
இதேசமயம், த.வெ.க. தலைவர் விஜய்யிடம் சிபிஐ தனியாக விசாரணை நடத்திவருகிறது.