தமிழ் நாடு

தலைமைச்செயலகம் - மீனவர்கள் 29இல் போராட்டம்!

Staff Writer

புதிய தலைமைச்செயலகம் கட்டுவதால் மீனவர்களின் கிராமங்கள் அழிக்கப்படும் அபாயம் இருப்பதாகப் பெரும் பிரச்னை எழுந்துள்ளது. 

முக்கியமான எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பலரும் மீனவர் வாழ்விடத்தில் புதிய செயலகம் கட்டுவதைக் கைவிடவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். 

இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பிலும் கண்டனப் போராட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன. 

இந்நிலையில், சென்னை மாவட்ட மீனவர் கிராமங்களின் சார்பில் வரும் 29ஆம் தேதி போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.