அ.தி.மு.க. தலைமை அலுவலகம் 
தமிழ் நாடு

தளவாய் சுந்தரம் அ.தி.மு.க. பதவிகளிலிருந்து நீக்கம்!

Staff Writer

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்தளவாய் சுந்தரம் அக்கட்சியின் அமைப்புச்செயலாளர், குமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் ஆகிய பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். 

கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு விரோதமாக தளவாய் நடந்துகொண்டதாகக் காரணம் கூறப்பட்டுள்ளது. 

முன்னதாக, கன்னியாகுமரியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை தளவாய் சுந்தரம் தொடங்கிவைத்தார். பா.ஜ.க. கூட்டணியிலிருந்து விலகியபிறகு, அக்கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளில் அ.தி.மு.க. கலந்துகொள்வதில்லை. இந்த நிலையில், தளவாயின் பங்கேற்பு சர்ச்சையாக ஆனது. 

அதனால், அவர் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.  

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram