தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. துணைப் பொதுச்செயலாளராக இன்று காலைவரை பதவியில் இருந்துவந்தவர், மாணிக்கராஜா.
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த இவர், இன்று திடீரென தி.மு.க.வில் சேர்ந்தார்.
சென்னை, அண்ணா அறிவாலயத்தில் இன்று காலையில் அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அவர் கட்சி மாறினார்.
அவருடன் வேறு பல நிர்வாகிகளும் தி.மு.க.வில் சேர்ந்தனர்.