முதலமைச்சர் ஸ்டாலின் நெல்லைக்குச் சென்றுள்ள நிலையில், தி.மு.க.வின் மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் நாளை மாலை காணொலிவாயிலாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
வாக்காளர் தீவிரத் திருத்தம் தொடர்பாக இதில் விவாதிக்கப்படும் என வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கூட்டணிப் பேச்சுவார்த்தை படிப்படியாக நடந்துவரும் நிலையில், மாவட்டங்கள்வாரியாக தொகுதி யாருக்கு என்பது குறித்து இன்னும் தீர்மானத்துக்கு வரவில்லை. இதையொட்டியும் மாவட்டச் செயலாளர்களுடன் கலந்தாலோசிக்கப்படும் என்று தெரிகிறது.