கோட்டை அப்பாஸ் 
தமிழ் நாடு

தி.மு.க. மாவட்ட நிர்வாகி மீது வழக்கு பதிவு!

Staff Writer

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 7ஆம் தேதியன்று கோவைக்குச் சென்றிருந்தார். அவரை வரவேற்று அக்கட்சியினர் பதாகைகளை வைத்திருந்தனர். அப்போது தி.மு.க.வினரின் பதாகைகளை மறைக்கும்படியாக இருந்ததாக உக்கடம் பகுதியில் பிரச்னை எழுந்தது.  

கோவை தி.மு.க. மாவட்டத் துணைச்செயலாளர் கோட்டை அப்பாஸ், அப்பகுதி நிர்வாகிகள் அங்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, காவல்துறையினரிடம் அவர்கள் கடுமையாக சத்தமிட்டனர். 

அப்பாஸ் ஒரு கட்டத்துக்கு மேலே சென்று, உதவி ஆய்வாளரை தோலை உரித்துவிடுவேன் என்றெல்லாம் பேசினார். 

அந்தக் காட்சி சமூக ஊடகங்களிலும் பின்னர் தொலைக்காட்சிகளிலும் பரவியது. 

பட்டப்பகலில் நடைபெற்ற இந்தப் பிரச்னைக்கு காவல்துறை பொறுப்பை வகிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் பதில்கூற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். 

அதைத் தொடர்ந்து, அப்பாஸ் மீதும் மற்ற சில உள்ளூர் நிர்வாகிகள் மீதும் அரசு ஊழியர்களைப் பணிசெய்ய விடாமல் தடுத்தல் உட்பட்ட சில சட்டப்பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது.