தமிழ் நாடு

தி.மு.க.வுடன் இ.கம்யூ கட்சி 2ஆம் சுற்று பேச்சு!

Staff Writer

சட்டப்பேரவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக தி.மு.க.வுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் குழுவினர் இரண்டாவது முறையாக இன்று மாலையில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இ.கம்யூ. மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், முன்னாள் செயலாளர் முத்தரசன், எம்.பி. சுப்பராயன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஜி. பழனிச்சாமி ஆகியோர் மாலையில் அறிவாலயத்துக்கு வந்தனர்.

டி.ஆர். பாலு தலைமையிலான குழுவினருடன் அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கடந்த தேர்தலில் ஆறு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டு தொகுதிகளில் இ.கம்யூ. கட்சி வெற்றிபெற்றது.

இந்த முறை எண்ணிக்கையைக் குறைக்குமாறு தி.மு.க. தரப்பு வலியுறுத்துவதாகக் கூறப்படுகிறது. இன்றைய கூட்டத்தில் முடிவு எட்டப்படாததால் நாளையும் பேச்சுவார்த்தை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.