கார்த்தி சிதம்பரம் 
தமிழ் நாடு

தி.மு.க.வுடன் பா.ஜ.க. பேச்சு - கார்த்தி சிதம்பரம் சொல்கிறார்

Staff Writer

தி.மு.க.வுடன் பா.ஜ.க. பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிட்டது என்று காங்கிரஸ் மக்களவைத் தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் குற்றஞ்சாட்டியுள்ளார். 

வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்ததுக்கு ஆதரவு தர தி.மு.க.விடம் பா.ஜ.க. பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிட்டது என்றும் அதற்கு ஒத்துக்கொண்டால் ஒரே நாடு ஒரே தேர்தலின்படி தமிழகத்தில் 2029இல் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது என்றும் கார்த்தி சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

அப்படி தி.மு.க. ஒரு முடிவை எடுக்குமேயானால், அது அந்தக் கட்சிக்கு இந்தத் தேர்தலைவிட மிக மோசமான முடிவாக இருக்கும் என்றும் கார்த்தி கூறினார்.