தமிழ் நாடு

திருப்பரங்குன்ற சர்ச்சைத் தூணில் தீபம் ஏற்றவேண்டும்- உச்சநீதிமன்றம் உத்தரவு

Staff Writer

மதுரை திருப்பரங்குன்ற மலையில் உள்ள சர்ச்சைக்குரிய தூணில் தீபத்தை ஏற்றவேண்டும் எனும் இந்துத்துவ அமைப்புகளின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. 

அந்தத் தூண் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளபோதே, ஒரு நாள் மட்டும் கார்த்திகையை முன்னிட்டு அந்தத் தூணில் தீபம் ஏற்றலாம் என அரவிந்தகுமார் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு கடந்த 20ஆம் தேதியன்று உத்தரவிட்டது. 

ஆனால் அதை மதுரை மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தவில்லை என இந்து மக்கள் கட்சியின் தலைவர் இராம.இரவிக்குமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார். நீதிமன்ற அவமதிப்பு வழக்காக இதை விசாரிப்பதாக இன்று கூறிய நீதிபதிகள், மீண்டும் மூல வழக்கு தொடர்புடைய கல் தூணில் நாளை தீபத்தை ஏற்றியே ஆகவேண்டும் என உத்தரவிட்டது. 

மேலும், மலையை மத்திய பாதுகாப்புப் படை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும் உத்தரவிட்டது. 

கோயில் அறங்காவலர் குழுவைக் கலைத்து உத்தரவிட்டுள்ளது. 

மாவட்ட ஆட்சியரின் அறிக்கை திருப்தியாக இல்லை என்றும் தலைமைச்செயலாளர், டிஜிபி நேரில் ஆஜராகவேண்டும் என்றும் கூறினர்.