திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா 
தமிழ் நாடு

திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது!

Staff Writer

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மகாதீப விழா இன்று பக்தி சிரத்தையுடன் கொண்டாடப்பட்டுவருகிறது. மாலை சரியாக மலை உச்சியில் 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட்டது. 

தேவாரம் பாடி ஓம் நமச்சிவாய அரோகரா முழக்கம் எழுப்பி பக்தர்கள் பரவசத்துடன் தீபத்தைத் தரிசித்தனர். 

மகா தீபம் ஏற்றப்பட்டதை அடுத்து சுற்றுவட்டாரப் பகுதிகளில் வீடுகள், பொது இடங்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. 

இதைப்போலவே மாநிலம் முழுவதும் உள்ள மலைக்கோயில்களில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது.

குறிப்பாக, பழனி முருகன் கோயில், மதுரை திருப்பரங்குன்றம், திருத்தணி முருகன் கோயில் ஆகியவற்றில் ஏராளமான பக்தர்கள் கார்த்திகைத் தீபம் ஏற்றலில் கலந்துகொண்டு பக்திப் பரவசம் அடைந்தனர்.